Tuesday, 26 September 2017

மீண்டும் ஒரு புதிய கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

கணுக்களின் 
விளிம்புகளைப் பற்றி ஏறிக் கொண்டிருக்கிறேன்
தனிமையின் நீட்சி நீண்டு உயர்கிறது
நினைவுகளின் 
படிமக் குழம்புகள் பாசியாகப் படர்கின்றன,
கேலிமப் புன்னகைகள் சுற்றிச் சுழன்றடிக்க
இடறிவிடும் 
உறவுகளின் வஞ்சம் மரணம் விளிக்கிறது,
சிதைவுகளின் கோட்பாட்டுக் கொடிகள் அறுந்து வீழ
கை கால் பரப்பிக் கீழிறங்குகிறேன்...
பற்றிக் கொண்ட 
கள்ளிக் கொடியின் பால்சுரப்பும் எனக்கானதல்ல...
மரணமும் விளிம்புதான் சற்றை நொடியில்,
தேகம் பூசிய உதிரக் குழம்புகளின் வரட்சியிழுக்க....
சொருகும் கண்களுக்குள் சொக்கட்டானாடிப் பறக்கும்
 இரை தேடும் பறவையொன்று
புத்தியொன்றைப் பொதுவில் வைத்துவிட்டு நகர்கிறது
மூச்சிழுத்தெழுகிறேன்....
முடிவிலிருந்தே தொடங்கட்டும்
மீண்டும் ஒரு புதிய கதை.

- மு.முகமது பாட்சா




No comments:

Post a Comment

Popular Posts