Sunday, 3 September 2017

இதுவும் கவிதைதான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் இரவு

இரவின் நிசப்தம் 
நீண்ட மர நிழல் 
ஒற்றை நிலா 
உதிராத பறவைகளிசை 
தளும்பாத குளம் 
தவிக்காத தாமரை 
சொட்டும் பனி 
சுள்ளிகளின் நெருப்பு 
ஒற்றையில் நீ 
ஒருமையில் நான் 
பேசாத பேச்சு 
கவிழாதப் பார்வை 
கொஞ்சம் தேனீர்
இத்தனை போதும்
ஓர் ஓவியம் வரைய, 
காதலில் வீழ, 
சாதலைத் தேட, 
காவியம் எழுத, 
கனவினில் மிதக்க, 
கவிதையில் குதிக்க... 
ஆ 
ம் 
இதுவும் கவிதைதான் 
நீங்களும் படிக்க ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts