
நரலையலை யோசையாய்
நாற்புறம் சூழ் சப்தவெளியில்
சருவரிப் படர்வேளையில்,
சப்தமிட்டு பெரும் கூர் பற்களுடையோன்
நகம் கீர் அககுருக்கள் பரத்தி
பயம் பிளிர்க்க வருமோர் உருவம்
காதலின் மடல் வரைந்து
காட்சியின் ஊடகமாய்ச் சிகைப் பொருட்கள்
சீப்பு,உதிர்த்துவிட்ட மருதாணி துகள்கள்
தின்று போட்ட மிட்டாய்த் தாள்கள்
சேகரித்து, பித்தாய்த் திரிவதாய்ச் சொன்ன
பைத்தியனாய் இருக்கலாம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment