நான்
இறந்துவிட்டதாக சொன்னேன் ,
மூக்கில்
விரலை வைத்து பார்த்தவர்கள் ,
இன்னமும் சாகவில்லை
என்றார்கள் !
.
செத்த பிணம் பேசவா செய்யும் !
***
தேவதைகளுக்கு மட்டும்
சிறகுகள் இருக்கின்றதே ,
ஏன் ? என்று கேட்டாள் ,
என் செல்லம்மா !
கடவுளிடம் சேதிகளைச் சேர்ப்பதற்கு
சிறகுகள் வேண்டும்தானே என்றேன் ,
கடவுளிடம் சென்றுவிட்ட பாட்டிக்கும்
சிறகுகள் முளைத்திருக்குமா ?
என்று கேட்கிறாள் !
***
என்னை
தள்ளி வைத்துவிட்டுப் போகும்
அந்தப் பார்வை ,
யாரையோ
களவாடிக் கொண்டு போகிறது !
***
என் கவிதைகளில் போதையிருப்பதாக
அவள் சொல்கிறாள் !
அவள் கண்களைப் பார்க்க முடியாமல்
கவிழ்ந்து நிற்கிறேன் ,
கவிதைகள், காமத்தை தொட்டு விட்டால்
கற்பிழந்ததாகச் சொல்லி விடுவாள் !
***
நெருப்பின் வார்த்தைகளில்
குளிர்ந்து போனதாக சொன்னார்கள் ,
சாத்தான் வேதம் ஓதுகிறான் !
***
அழுகையின் ஓசையில்
குழந்தை ஜீவித்ததாய்
சொன்னாள் தாதி !
அழாதே யென்றாள் அம்மா !
அழவைத்தது காதல் !
அழுகையின் வாசலில் ஏழை !
அழுதுவிடு என்று உத்தரவு ,
துக்க நிகழ்வில் !
சுமைகள் குறையுமென்று ,
அறிவியல் !
அழுகை , வாழ்க்கையின் வருகை !
.
***
உறங்கும் உண்மைகளை
எழுப்பிவிடுங்கள் ,
வதந்தீகள் தீ வைக்கின்றன !
***
பிரார்த்தனைகள்
இறைந்து கிடக்கின்றன ,
பூசாரியின் மடி நிரம்பும் காசுகள் ,
வரிசையில் வருகின்றது
தீர்வு கேட்கும் பிரச்சனைகள் !
ஸ்பெஷல் தரிசனத்தில்
சிறப்புக் கோரிக்கைகள் ,
அடிக்கும் கொள்ளைகளுக்கு
பாதுகாப்புக் கேட்டு !
வெளியிலிருந்து வீசப்பட்ட
பிரார்த்தனை யொன்று ,
'தேசத்தைக் காப்பாற்று ! '
நடை கதவை சாத்துகிறார் அறங்காவலர் ,
சிலை திருட்டு அதிகமாகிவிட்டது !
***
சாத்தானின்
எச்சில் மரங்கள்
நிழல் கொடுப்பதில்லை !
***
தேர் போன பாதையில்தான்
நானும் போனேன்,
தேர் வந்து சேர்ந்தது...
நினைவுகள் மட்டும்
அங்கேயே நிற்கிறது!
.
.........இருத்தியது யார்?.......
***
- மு. முகமது பாட்சா
இறந்துவிட்டதாக சொன்னேன் ,
மூக்கில்
விரலை வைத்து பார்த்தவர்கள் ,
இன்னமும் சாகவில்லை
என்றார்கள் !
.
செத்த பிணம் பேசவா செய்யும் !
***
தேவதைகளுக்கு மட்டும்
சிறகுகள் இருக்கின்றதே ,
ஏன் ? என்று கேட்டாள் ,
என் செல்லம்மா !
கடவுளிடம் சேதிகளைச் சேர்ப்பதற்கு
சிறகுகள் வேண்டும்தானே என்றேன் ,
கடவுளிடம் சென்றுவிட்ட பாட்டிக்கும்
சிறகுகள் முளைத்திருக்குமா ?
என்று கேட்கிறாள் !
***
என்னை
தள்ளி வைத்துவிட்டுப் போகும்
அந்தப் பார்வை ,
யாரையோ
களவாடிக் கொண்டு போகிறது !
***
என் கவிதைகளில் போதையிருப்பதாக
அவள் சொல்கிறாள் !
அவள் கண்களைப் பார்க்க முடியாமல்
கவிழ்ந்து நிற்கிறேன் ,
கவிதைகள், காமத்தை தொட்டு விட்டால்
கற்பிழந்ததாகச் சொல்லி விடுவாள் !
***
நெருப்பின் வார்த்தைகளில்
குளிர்ந்து போனதாக சொன்னார்கள் ,
சாத்தான் வேதம் ஓதுகிறான் !
***
அழுகையின் ஓசையில்
குழந்தை ஜீவித்ததாய்
சொன்னாள் தாதி !
அழாதே யென்றாள் அம்மா !
அழவைத்தது காதல் !
அழுகையின் வாசலில் ஏழை !
அழுதுவிடு என்று உத்தரவு ,
துக்க நிகழ்வில் !
சுமைகள் குறையுமென்று ,
அறிவியல் !
அழுகை , வாழ்க்கையின் வருகை !
.
***
உறங்கும் உண்மைகளை
எழுப்பிவிடுங்கள் ,
வதந்தீகள் தீ வைக்கின்றன !
***
பிரார்த்தனைகள்
இறைந்து கிடக்கின்றன ,
பூசாரியின் மடி நிரம்பும் காசுகள் ,
வரிசையில் வருகின்றது
தீர்வு கேட்கும் பிரச்சனைகள் !
ஸ்பெஷல் தரிசனத்தில்
சிறப்புக் கோரிக்கைகள் ,
அடிக்கும் கொள்ளைகளுக்கு
பாதுகாப்புக் கேட்டு !
வெளியிலிருந்து வீசப்பட்ட
பிரார்த்தனை யொன்று ,
'தேசத்தைக் காப்பாற்று ! '
நடை கதவை சாத்துகிறார் அறங்காவலர் ,
சிலை திருட்டு அதிகமாகிவிட்டது !
***
சாத்தானின்
எச்சில் மரங்கள்
நிழல் கொடுப்பதில்லை !
***
தேர் போன பாதையில்தான்
நானும் போனேன்,
தேர் வந்து சேர்ந்தது...
நினைவுகள் மட்டும்
அங்கேயே நிற்கிறது!
.
.........இருத்தியது யார்?.......
***
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment