எங்கே போகிறோம் நாங்கள்?

கற்களும், வீடுகளுமாய்
விளைந்து நிற்கும் வயல் வெளியில்
நெகிழிகளை,
புல்லென மேய்ந்து
மாய்ந்து போகும் கால் நடைகள்!
.....
மாசை பரப்பி
மாசை ஒழிக்க
குளு குளு அறையில் போராடும்
போராளிகள்!
.....
குடும்பத்தை மறந்த
நகரத்தின் ஓட்டங்கள்!
.....
காமம் தேக்கி மலர் கொடுக்கும்
காதலர்கள்!
.....
போதைக்கும் நியாயம் செய்யும்
நாயகர்கள்!
.....
ஆடை துறத்தலை விரட்டிச் செல்லும்
இணையத்தின் காதலர்கள்!
.....
குழந்தைகளை வேலைக்கு வைத்து
நாய்களுக்கு நன்றி பேசும்
நல்லவர்கள்!
.....எங்கே போகிறோம் நாங்கள்?.....
கள்ளிக் காட்டில் நின்றுக் கொண்டு
பூக்களின் அழகை ரசிக்கும்
பேதமைகளாய்!
.....
பாலைவனத்தில் படுத்துக் கொண்டு
சோலைவனத்தை சுகிக்கும்
சுவன வாசிகளாய்!
.....எங்கே போகிறோம் நாங்கள்?.....
- மு.முகமது பாட்சா

கற்களும், வீடுகளுமாய்
விளைந்து நிற்கும் வயல் வெளியில்
நெகிழிகளை,
புல்லென மேய்ந்து
மாய்ந்து போகும் கால் நடைகள்!
.....
மாசை பரப்பி
மாசை ஒழிக்க
குளு குளு அறையில் போராடும்
போராளிகள்!
.....
குடும்பத்தை மறந்த
நகரத்தின் ஓட்டங்கள்!
.....
காமம் தேக்கி மலர் கொடுக்கும்
காதலர்கள்!
.....
போதைக்கும் நியாயம் செய்யும்
நாயகர்கள்!
.....
ஆடை துறத்தலை விரட்டிச் செல்லும்
இணையத்தின் காதலர்கள்!
.....
குழந்தைகளை வேலைக்கு வைத்து
நாய்களுக்கு நன்றி பேசும்
நல்லவர்கள்!
.....எங்கே போகிறோம் நாங்கள்?.....
கள்ளிக் காட்டில் நின்றுக் கொண்டு
பூக்களின் அழகை ரசிக்கும்
பேதமைகளாய்!
.....
பாலைவனத்தில் படுத்துக் கொண்டு
சோலைவனத்தை சுகிக்கும்
சுவன வாசிகளாய்!
.....எங்கே போகிறோம் நாங்கள்?.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment