
உச்சரிக்கவியலாத ஊர்திகள்
இராத்தங்க இருபதினாயிரம் வாடகை
வான்வழிப்பயணம்
கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை
காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம்
அக்குள் நாற்றம் மறைக்கத் 'தெளிப்பான் '
கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி
பிறந்தநாள் மணநாள் காதலர் தினம்
புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள்
காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும்
மூன்றேகால் கோடி
கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில்
தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும்
இந்தியர்
கட்டைவண்டியிலும் கால்நடையாகவும்
வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை
குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் சாட்சி
எட்டு ரூபய் செருப்பைத் தைத்து தைத்து
திருப்பியும் தைப்பர்
பல்லுக்குப் பொடிமணல் மேலுக்கு வைக்கோல்
கொரகொரக்கு ம்வானொலிக்கும் தட்டழிவு
தகரக்கொட்டகை மணல் விரிப்பு
எட்டணாசீட்டு
பிறந்தது தெரியும் இறக்கபொவதும் தெரியும்
தேசம் என்று ஒன்று
உள்ளதென்றும் தெரிவர்
எம்மக்கள்
.
நாஞ்சில் நாடன்
No comments:
Post a Comment