Friday, 8 September 2017

யாருக்கு சொந்தம்.....

....யாருக்கு சொந்தம்.....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

எவை எவை
உனக்கு சொந்தம்?
.
"இந்த இடம், என் அப்பன் சொத்து
விட்டு கொடுக்க மாட்டேன்!"
.
"பத்திரம் அவன் பேரில் இருந்தாலென்ன?
பட்டாவை மாற்றி விடுங்கள்"
.
"என் உழைப்பு, என் சம்பாத்தியம்!
நான் ஏன், விட்டுத் தர வேண்டும்?"
.
"அகிலமே, என் குடையின் கீழ்!"
_'மாவீரன் அலக்ஸாண்டர்.
.
அவளை, உழுதவன் சொன்னான்,
"என் அத்தனையும், உனக்குதான்!"
அவள்
தன்னை உழுதவனிடம்
அத்தனையையும் 
எழுதி வாங்கிக் கொண்டாள்.
.
...பூமி சிரித்தது...

"நானே, எனக்கு சொந்தமில்லையா?"
....."என்னை, உனக்குள்
எப்படி எடுக்க முடியும்?"
...."உன்னையே,ஒரு நாள்
நான் தான் விழுங்கப் போகிறேன்!"
...."உனக்கு சொந்தம் நானில்லை,
எனக்குதான் நீ சொந்தம்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts