Tuesday, 25 July 2017

நான் இரசித்த கவிதைகள் - 2

கவிக்கோ க்கான பட முடிவு
கஜல்

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்



என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?



உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.



மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது



என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்



உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.

கவிக்கோ.அப்துல் ரகுமான்.

No comments:

Post a Comment

Popular Posts