
அவன் தனக்கு தானே சிரித்துக் கொண்டான்,
எழுதாத பேப்பரையெடுத்து வாசித்தான்,
இல்லாத நபரிடம் கை குலுக்கி விட்டு
கலந்தாலோசித்தான்,
ஒரு பெருஞ் சிரிப்புடன்
தான்தான் ஹோமரின் அக்கிலஸ் என்று ஆர்பரித்தான்,
பிரிசெஸ்ஸை பிரியாமானவள் எனச் சொல்லி
ஹோமரின் கவிதையால் அலங்கரித்தான்,
அகமானன் வந்து விட்டதாகச் சொல்லி
இல்லாத அவளை பின் பக்கம் மறைத்தான்,
கிழிந்த புத்தகமொன்று
அவன் கையில் வாளாக மிளிர்ந்தது...
அவன் குதி காலின் கீழ்
அரூப அகமானன் இறந்து கிடந்தான்...
சாபம் நீங்கியதாக சப்தமிட்டு கத்தினான்...
பயப்படாதே என்று சொல்லி,
பிரிசெஸ்ஸை அழகாய் இடம் வலித்து தூக்கியவன்
காணாத இதழ்களில் பிரன்ச்சு முத்தம் பரிசளித்தான்...
சுற்றி நின்றவர்கள் சிரித்தார்கள்,
படித்த பைத்தியம் என்றே பகடி செய்தார்கள்
அவர்களில் யாருக்கும் அவனது
அக்கிலஸையும் அகமானையும் மட்டுமல்ல...
காதலியாய் வடிவெடுத்த பிரிஸெஸ்ஸையும்
அவளாய் வாழும் தர்ஷினியையும் தெரியாது...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment