Saturday, 22 July 2017

பசி தீர்

No automatic alt text available.

நிழலொழுக்கும் இரவில் - 
நீ நூழிலாட்டிய மலரம்புகள் சிதறிக் கிடக்க 
இடறுதலால் வழல்லுய காயத்தில் 
உப்பிட்டுப் போகும் உவர் மழையில் 
தீ கொழுத்த வனமாய் எனைத் தீண்டுகிறாய்... 
நோ கொழுத்த நோயன் செப்பிய 
வாய் கொழுத்த காதல் வார்த்தையை 
நீயெப்படி அணைப்பாய்? 
வழுத்தரல் உயிரை வாய் கொடுத்தெழுப்புவாயோ... 
இல்லை 
சுவை பருத்த நதியைச் சாய்த்தே 
சுந்தரக் குளிரூட்டுவாயோ... 
மலர் தடுக்கி வீழ்ந்தவன் கதறுகிறேன்... 
நழுவிடும் நள்ளிரவு சாகும் முன்னே 
நல்கிடுவாய் என்னுயிரை நற்தமிழே!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts