.jpg)
பார்வையின் நூலைப் பிடித்து
அவளின் மாளிகைக்குள் நுழைகிறேன்,
தூக்கத்தைக் கையில் பிடித்து
பந்தாடிக் கொண்டிருக்கிறாள்...
கவிதைகளை வனமாக்கி வளரவிட்டவள்
வார்த்தைகளை
குடுவைக்குள் மூடி வைத்து
பருகச் சொல்கிறாள்,
அங்கேயும் சிலர்
திரிந்து கொண்டிருந்தார்கள்,
அவரவர் இதயங்களை
தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு,
காற்றில் கைவீசி நடம் புரிகிறாள்...
சாபு தாளம் போடும் என் விரல்கள்
அவளிடம் என் காதலைச் சொல்கின்றன...
ஒற்றைச் சிரிப்பில் ஒதுக்கிவிட்டவள்
பாடலொன்றைப் பாடுகிறாள்...
இசைக் கூட்டத் தெரியாமல் விரல்கள்
அலை மோதுகின்றன...
சப்தத்தின் வாசனைகள் மயக்கதிலாழ்த்த
மடியிலாழ்த்தி
என் தலையைக் கோதுவது
அவளின் விரல்கள்தான்,
விழித்துப் பார்க்கிறேன்....
அவள் கண்ணீர் மட்டுமே சொல்கிறது
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment