Tuesday, 11 July 2017

கயமைகள்

சாதியக் கொலைகளில் 
விழுந்தெழுந்து மீள்வதற்குள் 
தேர்தலில் வெற்றி யாருக்கு ? 
என்ற விவாத களங்களில் 
அனல் பரப்பி விட்டு... 
விஜய்க் காந்தின் தோல்வியும் 
ஜெ வின் வெற்றியும் 
அலசி ஆராயும் வேளையில்... 
மதுக் கடைகளை அடித்து நொறுக்கி 
விவாதத்திற் கழைக்க... 
பட்டென்று 
அறிவாள் வீசி விட்டுப் போகிறான் 
ஸ்வாதி யென்றப் பெண் 
துடித் துடித்து இறக்க... 
மதத் துவேஷத்தை ஊதிப் புகைத்த 
தறுதலைகளுக்குப் பதில் சொல்லி 
பிடிப் பட்டவன் 
காதலனா ? காமுகனா ? 
புரணியில் புழுக்கள் நெளிய... 
காஷ்மீரில் கலவரம் ! 
திருப்பூரில் தீவிரவாதி ! 
போதாமைக்கு 
பொதுச் சிவில் சட்டம் என்ற 
உணர்ச்சித் தீ களைத் தூண்டும் வேளையில்... 
மறந்தே போகிறோம் 
அல்லது கடந்து போகிறோம் 
நம் தேசத்தை 
கூறு போட்டு விற்கும் கயமைகளை ! 

- மு.முகமது பாட்சா 11-07-2016

No comments:

Post a Comment

Popular Posts