Tuesday, 11 July 2017

பதுங்கும் கவிதைகள்

Image may contain: one or more people

கவிதைகளை 
கைது செய்வதாக 
ஒருவன் சொல்லி விட்டுப் 
போகிறான் ! 

கவிதைகள் ஓடிப் போய் 
ஒளிந்து கொள்கின்றன ! 

காதல் கவிதைகள் 
கெளரவக் கொலைக்காக 
பயந்து நடுங்குகின்றன ! 

ஞானக் கவிதைகள் 
தத்துவமாய்ப் பேசித் 
தளும்புகின்றன ! 

பொதுவுடைமைக் கவிதைகள் 
தேடி யலைகிறது 
கைது செய்பவனை ! 

தகவல் வீசிச் சென்றவன் 
விடியலில் புரளி யென்று 
சொல்லிவிட்டுப் போகிறான் ! 

பதுங்கியிருந்த கவிதைகள் 
பாசாங்கென்று சொல்லிவிட்டு 
புறணிப் பாடக் கிளம்பி விட்டன ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts