
கபாடமில்லாத வாசலைத் திறந்துவைத்து
காத்திருக்கும் கட்பொறியில் சிக்கவைக்கும்
கபட நாடகத்தின் அங்கமாய் மந்தகாசம்
கரம்கோர்க்க வீழ்வதற்காய் வலிய வரும்
கொறினியனாய் அகம் நுழையும் காதலும்
காமாமும் வீழ்வது யாரென அறியாது
கலந்துருட்டும் மாயைப் பேழையில்
மடிந்துருகும் சுகப்பிரியங்கள் நழுவி நகன்றபின்
நீடித்தும் நிலைக்குமோ வஞ்சகச் சூதின் காதல் ?
கபாடம் = கதவு, கொறினி = அணில்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment