Tuesday, 11 July 2017

ஆகம மரம்

No automatic alt text available.

ஆகம விதிகளுக்குள் 
அந்த மரம் அமைந்திருந்தது, 

மரங்களின் வரிக் கோடுகள் 
பூசைகளை ஏற்றுக் கொண்டது, 

வரிசையில் நின்றவர்கள் 
கவலைகளோடு 
காசுகளையும் காணிக்கையாக்கினர், 

விதிகளை மாற்ற 
எலுமிச்சை பரிகாரங்கள், 

அங்கும்தான் உட்கார்ந்திருந்தனர் 
பிச்சைக்காரர்கள், 
ஆண்டவனை நம்பாமல்... 

அங்கும்தான் செருப்புகள் 
களவு போயின, 

அங்கும் சில குழந்தைகள் 
காணாமல் போயிருந்தனர், 

நகைகளும் கூட 
களவு போயிருந்தது, 

கும்பிடப் போகும் போதும் 
கும்பிட்டு வரும் போதும் 
சிலர் செத்தும் போனார்கள், 

ஆனாலும் 
நம்பிக்கை அந்த மரத்தை 
அழகாய் அலங்கரித்தது. 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts