
மீட்டும் விரல்களுக்கு மட்டுமே தெரியும்
எந்தத் தந்தியில் என்ன நாதம் எழுமென்று !
வீணைகளுக்கும் வியர்க்கதான் செய்கிறது
மீட்டலின் உச்சக் கட்ட நேரத்தில் !
இசைத்த லினிடை ஒரு துளி மெளனமும்
இசையாகதான் ரசிக்கப் படுகிறது!
மடியில் தலை வைத்துப் படுக்கும் வீணைக்கு
கர்வம் சற்றுக் கூடுதல்தான்!
தழுவும் விரல்களை முத்தமிட்டு இசைக்கிறது
அசைவிற்கேற்ற இராகங்கள்!
வீணையும் விரல்களும் மட்டுமே அறியும்
இசையின் சூட்சம விதிகளை!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment