மீசான் கற்கள்
மீசான் கற்களை அழித்து
வரலாற்றை
புதைத்துக் கொண்டிருக்கிறோம்...
படிகார கற்களை
பளிங்கென்று
நம்பத் தொடங்கி விட்டோம்...
கேள்விகளால் நியாயம் செய்து ..
கைகளை ஏந்துகிறோம்,
மேகங்கள் திசை திரும்பிப் போகிறது...
கலிமா மொழி
காற்றில் அசையாமல் நிற்க
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment