
இரத்தச் சேற்றினை
உழுது கொண்டிருக்கிறது
காவல் கலப்பைகள் ,
தழைக்கும் பயிர்கள்
தரிசு நிலத்தில் புதைந்து கொண்டு ,
ரோஜாக்களின் தேசத்தில்
வண்ணங்களைக் கூட்ட
முஸ்லிம்களின் உதிரங்கள் ...
ஓநாய்கள்
ஓரணியில் நின்று கொண்டிருக்க
காந்தி மண்ணில் கலவரம்
மீண்டும் காட்சியாகிறது ,
தூங்குகின்றன
ஊடக உறுமல்கள்....
இலங்கையின்
இன்னொரு படிமானமா இது?
இரத்த நக்கிகளே
நீங்கள் புறாக்களின் வடிவினில்
கண்ணீர் வடித்தாலும்
உங்கள் மூச்சுக் காற்றினில் வீசுகிறது
உதிரத்தின் நாற்றம் ,
இரத்தப் பூமியில்
ரோஜாக்களென்றும் விளைவதில்லை ...
பார்த்துப் போங்கள்
புதைந்து கிடக்கும் உடல்கள்
மீண்டும் உயிர்த்தெழப் போகின்றன
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment