
நிழல் தராத மரமாகத்தான் அஃது இருந்தது,
கிளைகளும் தழைகளும் அதிகம்தானென்றாலும்
நிழல் தராத மரமாகத்தான் அஃது இருந்தது,
பறவைகள் கூட அண்டுவதில்லை
வெட்பம் தகித்த மரத்தில்
பழங்கள் கூடப் பகடமாய்தான் பழுத்திருந்தன,
மென் காற்றிலும் சலசலத்துப் படபடத்தது,
வெட்டிய கோடாரிகள் கூர் மழுங்கின,
வெட்டியான அம்மரம்
வெட்டியான் விறகிற்கும் உதவாதென்றார்கள்,
கொட்டிய தீயில் மூட்டியெரித்தார்கள்
கொழுந்தெழுந்த நெருப்பில்
கொள்ளிப் போட்டுக் கொண்டது அம்மரம்...
துளிர்க்காத மரத்தைத் துளிர்க்க விடலாம்
எதுவும் கொடுக்காத
மரத்தை கொன்றுவிடல் பாவமில்லை..
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment