
புனித இரவில்தான்
பூத்தது
இறைவனின் திருமறை!
வரவேற்போம்
லைலத்துல் கத்ரென்னும்
சிறப்பான இரவுகளை!
ஜபலுன் நூர்
மலை உச்சியில்தான்
அண்ணலார்த் தவத்தின்
ஹீராக் குகை!
அமைதிக்குத் தேடும்
அழகிய பாறைகளின் சோலை...!
பாறைகளே
அருள் நபி
தவசித்து வசித்த
கூரையின் வோலை!
ஈரம் சொறிந்த
பாறைகளாக இருக்கும்...
அருள் தேடியவருக்கு
நிழல் தந்து தரிசித்தது!
அகவை நாற்பதை
எட்டிய நாளில்
அழைத்தது அசரீயாய்
வானவர் ஜிப்ரயிலின்
குரல் !
முகம்மதுவின் (ஸல்)
முகத்தில்
முத்து முத்தாய் வியர்வைகள்!
முழுவதுமாய் நனைந்தார்
நடுக்கத்தின் பிடியில் !
அதே குரல்
இப்போது ஜிப்ரயில் எதிரில்!
"ஓதுவீராக!"
அண்ணலார்ப் பகர்ந்தார்
"நான் படிக்காதவன்
எனக்கு ஓதவே தெரியாது!"
மும்முறை உரைத்தும்
தான் உரைத்ததை
உரு'வாய்ச் சொன்னார்!
ஜிப்ரயில் அரவணைப்பில்
அண்ணலாரின் நடுக்கம்
நடுங்கி விலக...
ஓதினார்... ,
"படைத்த இறைவனின்
திரு நாமம் கொண்டு
ஓதுவீராக!"
"அலக் என்ற நிலையிருந்தே
மனிதனைப் படைத்தான் !
ஓதுவீராக !"
"உம் இறைவனே
மாபெரும் கொடையாளி !
எழுதுகோலைக் கொண்டும்
கற்றும் கொடுத்தவன்
அவன் மட்டுமே" - (96 :1 - 5)
உலகிற்கு
புனிதமாய் வந்தது திரு மறை !
நாமும்தாம் ஓதுவோம் !
ஏகத்தின் ஏகன்
நமக்கும்தான் சொன்னார்...
அண்ணலாரின்
வாய் மொழிகளில் !
"ஓதுவீராக!"
- மு.முகமது பாட்சா (02.06.2016)
No comments:
Post a Comment