
இந்தப் பூந்தோட்டத்தைப் பற்றி
உனக்கு என்ன தெரியும்?
இப்போது இதனுடன்தான்
அதிகம் வசிக்கிறேன்,
உன் ஒவ்வொரு கணங்களுமே
ஒவ்வொரு செடியாக நடப் பட்டதுதான்,
உன் புன்னகைகளை இரசித்தே
சில பூச்செடிகள் இங்கு உயிர் பெற்றன,
உன் விழிச் சிமிட்டல்களுக்காகவும்
சில வண்ணப் பூச்செடிகள்,
உனைக் காணும் வரை
இதுவும்
என் மனம் போல் பொட்டல் காடுதான்,
உன் முதல் பார்வைக்காய்
ஒரு ரோசாவை நட்டு வைத்தேன்,
அஃது உன்னைப் போழில்லை
இப்போது பூத்துக் குலுங்குகிறது,
நீ விட்டுச் சென்ற நாளில்தான்
இங்குப் பட்டாம் பூச்சிகள்
கூடு கட்டத் தொடங்கின,
பொய்மையின் காதலை
நீ பூசிக் கொண்டு போன போது,
இவை உண்மைக் காதலை
எனக்கு
பாடம் சொல்லிக் கற்றுக் கொடுத்தன,
உனக்கு நான்
எப்போதும் நன்றி சொல்வேன்,
நீதான் , எனக்கு
பூந்தோட்டம் அமைக்கக் கற்றுக் கொடுத்தாய்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment