Friday, 7 July 2017

ஒரு யுகத்தின் சுவடுகள்

தொடர்புடைய படம்

நாம் 
அழிந்து போன ஒரு யுகத்தின் 
சுவடுகளென்று சொன்னால் 
நம்பவா போகிறீர்கள்? 
அடுத்த யுகத்தின் 
ஆயிலும்,பெட்ரோலுமாய் 
நாம்தாம் புதைந்திருக்கிறோம், 
அகழ் பொருள் ஆய்வாளர்கள் 
தோண்டிப் பார்த்தவரை 
இங்கொரு நாகரீகம் 
இருந்ததற்கான கூறுகளே 
இல்லையென்றுதான் சொல்லுகிறார்கள், 
நிலக்கரியும்,வைரமும் 
அடுத்த யுகத்திற்கு ஆட்படாத 
கனவாகவே போனது, 
சிதைந்த கூழ்மையான 
எலும்புக் குவியல்களை வைத்து 
நம்மை அவர்களால் 
வடிவமைக்க முடியவில்லை, 
யுகம் முடிவிற்கு வந்தது மட்டும் 
இயற்கையினால் அல்ல என்று 
ஆய்வுகளின் அடிக் குறிப்பு 
தெளிவாகச் சொல்கிறது, 
நிச்சயமாக நம்புங்கள்... 
அழிந்து போன யுகத்தின் 
அடையாளம் தெரியாத சுவடுகள் 
நாம்தாம் என்று 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts