Wednesday, 12 July 2017

கமல் கைது செய்யப் படுவாரா? - அர்னாப் அட்டகாசம்

தமிழகத்தில் பல பிரச்சனைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் ரிபப்ளிக் டிவி அர்னாப் அவர்கள் மிகவும் முக்கியமான பிரச்சனை ஒன்றை எடுத்து, அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அது, "நடிகர் கமல் ஹாசன் கைது செய்யப் படுவாரா?" என்பதுதான். 

Image may contain: 1 person, standingவிஜய் டிவியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி, பல சர்ச்சைகளை உள்ளடக்கி இருந்தாலும் அதனைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. இந்த நிகழ்ச்சி இந்திய கலாச்சாரத்தையும், இந்துக்களின் பண்பாட்டையும் கொச்சை செய்கிறதென்றும், அதனால் இதன் நிர்வாகி, தொகுப்பாளர் கமல் ஹாசன், மற்ற பங்கேற்பாளர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த வீர மாணிக்கம் சிவா என்பவர் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். 


இவர்களின் இது போன்ற கூத்துகள் அடிக்கடி அரங்கேறுவது சகஜம் என்றாலும் கே.வி ஆனந்த் போன்றவர்களால் புகழப்பட்ட அர்னாப்பிற்கு இது மிக முக்கியத் தேசிய பிரச்சனையாக மாறிப்போனது. இவ்வளவு மட்டமான ஊடக இயலரை நாம் எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த செய்தி , கமல் கைது செய்யப் பட்டதைப் போன்றே சித்தரிக்கப் பட்டது. 

அர்னாப் இதைப் பற்றிக் கமலிடம் விவாதித்த போது கமலும் காட்டமாகவே ,"ஏன் இதுவரை கிரிக்கெட் சியர்ஸ் கேர்ள்களைக் கைது செய்யவில்லை? அவர்கள் என்ன இந்திய பண்பாட்டின் சிகரங்களா?' எனக் கேட்டார். 

'என்னை அவர்கள் கம்யுனிஸ்ட்டாகப் பார்க்கிறார்கள், ஆனால் நான் ஒரு பகுத்தறிவாளன்' என்றும், என்னைக் கைது செய்தால் கவலை படவும் மாட்டேன்' என்றார். 

இந்தப் பிரச்சனைக்கு இந்து மகாசபை 'சத்ரபதி மகாராஜா' என்பவர்,'கமல் இந்து கலாச்சாரத்திற்கு எதிராகச் செயல் படுவதாகவும், குற்றம் சாட்டியுள்ளார். 

சமீபத்தில் 'ஒரு பெண்ணைப் பகடையாட்டத்தால் நகர்த்திய கதைதான் மகாபாரதம்'என்று கமல் பேசியிருந்தார். மேலும் திரையரங்கு GST விஷயத்தில் முதலில் குரல் கொடுத்த நடிகரும் அவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அவரை இதில் நீட்டித்தால் , இந்துத்துவாவிற்கு எதிரான கருத்துகளை இதன் மூலமாக எடுத்து வைப்பார் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.

பற்றி எரியும் தமிழகத்தின் பிரச்சனைகளைத் திசை திருப்ப பிஜேபி இப்போது கமல் ஹாசனை கையில் எடுத்திருக்கிறது. 
கைதுதான் செய்து பாருங்களேன்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts