Wednesday, 5 July 2017

வாழ்த்துங்கள்

Image may contain: text

வாழ்த்துங்கள் , 

வாழ்த்துகள்தான் 
உறவுகளின் வாசலறை,

நட்புகளின் 
நலவுச் சொற்கள், 

துரோகத்தின் பிடிமானத்தை 
வாழ்த்துகள்தான் 
அறுத்தெறிகின்றன,

வாழ்க்கையின் 
இணைப்பு மொழி,

கொடுத்துப் பெறும் 
உன்னதப் பரிசுப் பொருள்,

வாழ்த்துகளின் தோட்டத்தில்  
புன்னகைகள் 
பூத்துக் கிடக்கின்றன,

வாழ்த்துங்கள் 
வாழ்வதின் அங்கீகாரம்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts