
யாரோ ?
யாருடனோ ?
யாருக்காகவோ ?
கேள்விகளில்
தொக்கித் தொடரும்
கேள்விகளின் தேகம் !
சிந்தனைகளில்
சிக்கியும் பிடிபடாத
ஓரு மாயைப் புள்ளி !
சித்தாந்தம்
தெரிந்ததாய்ச் சொல்கிறான்
சிதையும் தேகத்தான் !
ஆசைகளை
ஆகாயத்தில் பறக்க விட்டு
அறுந்து வீழ்ந்ததும்
அழுது தொலைக்கிறான் !
சொற்பச் சுகங்களையும்
நிறைந்த
துயரங்களையும் தவிர
வாழ்க்கையின் மிச்ச மென்ன ?
ஏறுகின்ற ஏணியின்
காலடியில்
வாழ்கிறது கரையான் புற்று !
வீழ்கின்ற நேரம்
அவைகளுக்கும் தெரியாது !
மரணமொன்றும்
புதிர் கிடையாது....
புழுக்களின் வீடுதான்
புழுக்களுக்கும் கூட !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment