Monday, 10 July 2017

குத்த உணர்ச்சி


கண்மா கரையெல்லாம்
தூர்த்தாச்சி!-சொந்த
கழனி வெளியெல்லாம்
மனை போட்டு வித்தாச்சி!

நகர வாழ்க்கையும்
பழகிதான் போச்சி!-இந்த
மின்சார புழுக்கத்தில்
புரிதலும் வந்தாச்சி!

இருவதுக்கு இருவது
வீட்டில் இருந்து-என்
அப்பாதான் சொல்றாரு,
"என் ஆயுள் முழுசும்
வீணாகப் போச்சி?"

எனக்குள்,இப்பவும்
வருத்தம்
இருக்கத்தான் செய்யுது,
'அப்பாவின் உழைப்பை
திருடித் திண்ணக் குத்தம்'

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts