Monday, 3 July 2017

செந் நாய்கள்

No automatic alt text available.

கலகக்காரர்களின் வீதியில் 
அற்பமாய்ப் பார்க்கும் 
நர உரோகதிகளின் 
விழிகளின் திமிரையும் மீறி 
கருணைப் பார்வையின் 
விழி நீர்ச் சிதறல்கள் 
சிந்திக் கிடக்கும் 
உதிரப் பெருவெளியில் கலக்க 
இரைந்துக் கிடக்கும் 
கத்திக் கொலை யாயுதங்களை 
கைகளிலெடுத்து ஒழித்துப் போடும் 
மெளனக் காரரின் வெள்ளை உடுப்பில் 
உதிரத்தைத் தெளித்து 
செய்தி ஒளிப் படமிகள் காட்சிகளை 
மாற்றி 
இவர்தான் குற்றத்தின் காரணனென்று 
திரித்த காட்சிப் பிழையில் 
வழக்கொன்று வடிவெடுத்து 
காரணன் நீயா ? யென.... 
சுயம் போர்த்த நீதியரசன் 
தொடுத்த வினாத் தூண்டிலின் விடையாக 
கண்களில் ரெளத்திரம் கூட்டி 
"ச்...சீய் ...த்தூ.." வென்றே துப்பிய 
அவ் வெள்ளை உடுப்பனின் 
விடையமே தீயின் நாக்குகளாய் 
உக்கிரம் கூட்டி பற்றிய தீ 
பலரின் நெஞ்சில் புரட்சியாய் வெடிக்க 
தீவிரவாதிக் கைது என்றே 
செய்திப் பரப்பும் அடி நக்கி வாழ் 
ஊடக நிழல்களில் இன்னமும் 
உதிரம் குடிக்கும் அச் செந் நாய்கள் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts