Tuesday, 18 July 2017

சொல் மனமே

Image may contain: outdoor and water

காதலே ! ஓ...காதலே ! 
நீ காற்றா ? இல்லை மழையா ? 
சில்லென்று பூத்த 
சிறும் குளிரா ? 
சொல் ..சொல் மனமே ! 

காமம் விரித்த சிறகா ? 
காத்திருக்கும் உறவா ? 
மாயன் விரித்த வலையா ? 
மார்பில் தவழும் மலரா ? 
சொல்..சொல் மனமே ! 

பாடல் செய்யும் தமிழா ? 
பார்வைச் செய்யும் குறும்பா ? 
வன்மம் செய்யும் மொழியா ? 
வலையில் வைத்த இரையா ? 
சொல்..சொல் மனமே ! 

கவிதை மொழியின் அழகா ? 
கனவில் வாழும் உயிரா ? 
மோகத் திரையின் நிழலா ? 
மோச வலையின் சிறையா ? 
சொல்..சொல் மனமே ! 

மூப்பில் மறையும் நிலவா ? 
முதுமைத் தவழும் தொடரா ? 
இரந்து வாழும் பொருளா ? 
இறப்பில் வாழும் பயிரா ? 
சொல்..சொல் மனமே ! 
மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts