Friday, 14 July 2017

எனக்கென்ன?

Image may contain: 1 person

கற்பனையில் சிறகுகள் வரைந்து 
வானத்தில் பறக்க விடுகிறேன்... 
கவிதைகள் கை தட்டலில் நனைகின்றன ! 
வானத்தில் வல்லூரின் பிடியில் சிக்கி 
உதிரம் சிந்தச் சிதறி விழும் பறவையை 
அங்கே யார் கண்டது ? 
காதலைப் பற்றி எழுதும் அவ் வேளையில்தான் 
மனிதர்களைக் கொறித்துக் கொண்டிருந்தன 
இராணுவக் குண்டுகள் ! 
செய்தி வாசிப்பின் சில நிமிடங்களில் 
கடந்து போகிறது ஏதோ ஒரு செய்தியாக ! 
பாலஸ்தீனத்துப் பறவைகளைச் சுட்டு வீழ்த்தினால் 
எனக்கென்ன கவலை ? 
என் வீட்டுப் பறவைகள் பத்திரமாக இருக்கின்றன! 
வெட் டரிவாளில் வீழ்ந்து கிடப்பது 
என் தங்கையே கிடையாது ! 
முத்த கவிதைகளை மிச்சம் வைத்திருக்கிறேன் 
முடிக்கக் கொஞ்சம் கற்பனைத் தேவை !

- மு.முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts