பிரபல ஓவியர் வீரசந்தானம் இன்று மரணமடைந்தார்!
ஓவிய உலகில் குறிப்பிட்ட இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட ஓர் ஓவிய மேதை ,
கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில் என்ற ஊரில் பிறந்தவர். சிறு வயது முதலே ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார்.
" கோவில் பிரசாதங்களைச் சாப்பிட்டு வளர்ந்தவன்" என்று தன்னைப் பற்றி அவரே சொல்லியிருக்கிறார். கோவில்களின் பழம் கலைகள்தான் அவர் ஓவிய மனதைத் தூண்டி விட்டிருக்க வேண்டும்.
அவரது ஓவியங்கள் பழங்கலைகளை மீளாக்கம் செய்தது. சகட யாழ், மகர யாழ், காமதேனு போன்றவை இவரது ஓவியத்தின் பெருமைகளாகத் திகழ்ந்தன. இவர் தமிழ் பற்றாளரும் கூட. ஈழ மக்களுக்காகக் குரல் கொடுத்து ஓய்ந்த மனித ஓவியம் இவர்.
ஓவியர் கீதா என்பவர், இவரது வாழ்க்கை வரலாற்றை, 'காமதேனு' என்ற பெயரில் ஆவனப் படமாகவும் எடுத்துள்ளார்.
கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்த இவர் , தனது ஊரிலிருந்து தினமும் ஐந்து மைல் தொலைவு நடந்தே சென்றுதான் படித்துள்ளார். உணவுகள் கூட ஆசிரியர்கள்தான் அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார்கள்.
மும்பையில் டெக்ஸ்டைல் டிசைனராகப் பணி புரிந்தவர், வேலையை விட்டுவிட்டு ஈழ பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். பிரபாகரனின் அன்பையும் பெற்றிருந்தார்.
'மாவோ போல் தமிழர்கள், சாதிகளுக்கும் மதங்களுக்கும் எதிராகப் போராட வேண்டும்' என்று அடிக்கடி சொல்லிவந்துள்ளார்
சந்தியா ராகம், பீட்சா, கத்தி உட்படப் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார்.
இவரது உச்சக் கட்ட சாதனையாக முள்ளி வாய்க்கால் நினைவிடம் அமைந்துள்ளது. இதன் வடிவமைப்பாளரும் இவர்தான். ஈழ நினைவுகளோடு ,இவரையும் நினைவு கூறும் நினைவகமாக அஃது அமைந்து விட்டது.
அவரது கடைசி ஆசை ,'டாஸ்மாக்குகளை அரசே மூட வேண்டும் ' என்பதுதான். இதனால் தமிழினம் அழியும் சூழல் இருப்பதாக அடிக்கடி சொல்லி வந்தார்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment