
ஆசை வேள்வியில் எரித்துப் போகும்
அந்தச் சாத்தானியத் தீயில்
விரல்களில் பற்கள் முளைத்து
உதிரத் தாகத்தின் தவிப்பில்
அரக்க உருமாறி , நச்சின்
மூச்சுக் காற்றோடு தமனிகளின்
நாளத்தில் பல் பதித்துச் சுவைத்துறிஞ்சும்
அவ் வேளையில் மெளனம்
சுவைக்கச் சொல்லி நகரும் அச்
சாத்துவிக மனிதனை முதலில் கீறாமல்
நகருமா பார்வையின் நகங்கள்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment