உற்பத்தி யானது ஜென்மம்,
அஃது ஆசைகளின்
விளைச்சலில்,
விருட்சமாய் வளர்ந்தது,
இட்டக் குழி உரிமையும்
இல்லையென்ற போதும்,
அதன் மேல் தொட்டு நின்று,
'எட்டு திக்கும் எனதென்றே'
சொந்தம் கொண்டாடியது,
விட்ட குறை,தொட்ட குறை
விளையாட்டும் விளையாடியது,
நிலையாமை உணராது
'நிலையென்றே' ஓடியது,
உறவுகளை வேரறுத்து
பதவிகளையும் தேடியது,
சுடும் மணல் மேட்டினிலே
வீழ்கின்ற பனித் துளிதான்
தானென்பது மறந்துவிட்டு
கெட்டறிவில் சுற்றியது,
பட்டறிவு வந்தபோதும்
பல்லாங்குழியில்
தொட்டழித்த காய்களாகவே,
போனதிந்த ஜென்மமே..
- மு.முகமது பாட்சா

No comments:
Post a Comment