Tuesday, 11 July 2017

கறை படிந்தவர்கள் கதை

Image may contain: one or more people

வார்த்தைகளின்றி 
ஒரு கவிதை 
வெள்ளைத் தாளாய் 
உட்கார்ந்திருக்கிறது ! 

எழுதுகோல் 
கிறுக்கிப் போட்டத் தாள்கள் 
இறந்து போய்க் கிடக்க... 

வார்த்தைகளின்றி 
ஒரு கவிதை 
வெள்ளைத் தாளாய் 
உட்கார்ந்திருக்கிறது ! 

தவறி விழுந்த 
மசிக் கூடு 
ஓவியம் வரைந்துப் போக... 

வார்த்தைகள் 
வந்து விழுகிறது 
கவிதைகளாக ! 

நிச்சயமாக அது 
உன் கதையோ 
என் கதையோ அல்ல ! 

தவறி விழுந்து 
கறைப் படிந்தவர்களின் 
கதையாகத் தானிருக்கும் 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts