
சத்தியத்தின் கதவுகள்
சாத்தபட்டிருந்தது!
சாவி தொலைந்து விட்டது
அல்லது,
தொலைக்க பட்டது!
முகமூடி மனிதர்கள்
ஆட்சிக் கட்டிலில்...
சத்தியம் பேசிக் கொண்டு!
ஓ நாய்களுக்கும்,
ஆட்டுக் குட்டிகளுக்கும்
ஒப்பந்தம் போடப் பட்டது!
"அந்த,இரத்தத் துளிகளைத்
துடைத்து விடுங்கள்...
ஆட்டுக் குட்டிகளைக்
காணவில்லை?"
பள்ளி வாசல்களில்
வெடி வைத்தவனும்..
ஐந்து வேளைத் தொழுகிறான்!
'முஸ்லிம்' என்ற
பெயர் தாங்கி!
"கடவுளைப் பார்க்க
யார், காசு நிர்ணயித்தது?
நடையை சாத்துங்கள்...
கடவுள்
வீட்டிலும் இருக்கிறார்!"
"ஓ நாய்களை
விரட்டி விடுங்கள்...
மனிதம் மீது பயணிக்கிறது!"
சத்தியத்தின் கதவில்
சின்னதாய் ஒளிக் கீற்று!
அது, உனது
நம்பிக்கையாக இருக்கலாம்!
சாவி தொலந்தாலும்
கதவு
நிச்சயம் திறக்கும்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment