
செம்புல மென் தேகத்தில்
சித்திரம் வரைகின்ற
செம்புகத்தானே...
தூமையின் நிறம் கோர்த்த உன்
பற்களைத் துடைத்துக் கொள்...
மிருகராசப் புணையலில்
செத்தக் கொறிணியைதான்
நீ நக்கி நலம் காண்கிறாய்...
பச்சை மொழியிலெனக்கு
பாடை விரித்தது போகட்டும்...
உன் உச்சுவலம் தீர்ந்ததும்
உன்னைக் கொஞ்சும் பணத்தை
கொஞ்சம் கொட்டி விட்டுப் போ...
பரத்தையின்
பாழ் வயிறும் தான் பசிக்கிறது !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment