
அத்தனை அகோரிகளும்
இரத்த வாடையின்
பிணச் சாம்பலில் குளித் தெழுந்து
நிர்வாணத்தின் சாயம் பூசி
சுட்ட இறைச்சியின் சுடுப் பரப்பில்
வயிற்றை நிரப்பி
நான் தான் கடவுளென்று
கதைச் சொல்லி மிரட்டும் விழிகளோடுவே
நகரத்தின் வெளியிலும்
நாகரிக ஊர்திகளின் பவனியிலும்
உலா வரும் காட்சிகள்
கனவுகளாய்ப் போவதற்கு வாய்ப்பே யில்லை !
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment