Thursday, 13 July 2017

தப்பு தாளங்கள்

தப்பு தாளம் painting க்கான பட முடிவு

விதைத்தது விளையாமல்,
விதைக்காதது விளைந்தது,

திங்கள் பொய்த்து
மழை வந்தது,

கோடையில் 
குளிர் வருடிப் பார்த்தது,

ஆடிக் கழிந்து
அம்மி நகர்ந்தது,

கடல் நீர் உள் வாங்கி
மெல்ல எட்டிப் பார்த்தது,

ஆண், பெண் குணங்கள்
அகன்று போனது,

பிறன் மனை நோக்கல்
எளிதாய் ஆனது,

தாளங்களெல்லாம்
தப்பிதான் போகுது,

யுகத்தின் ஜதியும்...
மாறத்தான் போகுதோ?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts