சூஃபி கதை(தயங்காதீர்)
_________________________________

ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்க பட்டவர்,
தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னை சுகவாசியாக மாற்றிக் கொண்டார்.மக்களால், அவரை எதிர்த்து
எதுவும் செய்ய முடியவில்லை.
............அதுசமயம் ஒரு சூஃபி ஞானி அந்த மாநிலத்திற்கு
வந்திருந்தார்.அவரை காண்வேண்டும் என்ற ஆவல்,கவர்னருக்கு
ஏற்பட்டது.அவரை,அழைத்துவர உத்தரவிட்டார்.
....ஆனால்,சூஃபி ஞானி வர மறுத்துவிட்டார்."அவரை வேண்டுமென்றால்
என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்!"என்று கோபத்துடன்
கூறினார்.
....கவர்னர் கோபத்துடன் விரைந்து வந்தார்.வந்தவுடன்,அவருக்கு
முகமன் கூறினார்.ஞானியும், அவருக்கு பதில் முகமன் கூறினார்.
" நான் இந்த மாநிலத்தை ஆளும் கவர்னர் என் அழைப்பை, ஏன்
நிராகரித்தீர்கள்? என அதிகாரத்துடன் கேட்டார்.
சூஃபி அவர்கள் சிறிது நேரம் அவர்களை முறைத்து பார்த்தார்.
"ஆள்பவன் யார்? நீயா? அல்லாவா? காற்றில் பறக்கும் பதர் நீ!
மக்களின் செல்வத்தில் சுக போகம் அனுபவிக்கும் நீ,ஒரு
திருடனைத் தவிர வேறு யார்?உனக்கு ஹுதாமாவின் நெருப்பு
காத்திருக்கிறது என்பதை அறிவாயா?"
கவர்னர்,அவரின் கோபத்தை கண்டு பயந்தே போனார்.
அங்கிருந்த மக்களை பார்த்து ஞானிச் சொன்னார்,"இந்த மண்
அல்லாஹ்,உங்களுக்கு கொடுத்த அருள் கொடை.இதை,
உங்களை, நிர்வகிப்பவர்கள்,அபகரித்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள்
அவர்களுக்கு சன்மானம் மட்டுமே வெகுமதி!அவர்களைக் கண்டு
பயப்படாதீர்கள்.
அவர்கள் அத்துமீறும் போது,வாய்களால் எச்சரிக்கை செய்யுங்கள்!
அதையும்மீறினால்,சாட்டையை கொண்டு தண்டியுங்கள்.மேலும்
தவறு செய்தால் வாளைக் கொண்டு தண்டிக்க தயங்காதீர்கள்.
அவர்,உங்களின் வேலைக்காரர் தான்"
மக்கள் கவர்னரை ஆவேசத்துடன் பார்த்தார்கள்..நிலைமையை
புரிந்து கொண்ட கவர்னர் மக்களிடமும்,ஞானியிடமும்
மன்னிப்பு கேட்டார்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment