
தீர்வுகளும்
ஒரு மாயைதான்!
தீர்க்கபட்டதாய் தோன்றி
தீராமல்
வந்து நிற்கும்!
சில நேரம்,
தீர்வுகளே தீர்வாவதில்லை!
தீர்வுகள்
தீர்வுகளை ஜீரணித்துவிடும்!
தீர்வுகளும்
மனதின் வலியை குறைக்கும்
காரணிகள்!
அடுத்த நகர்வுக்கு
அடியெடுத்து கொடுக்கும்
நண்பன்!
தீர்வுகளும்
ஒருமாயைதான்
தீர்க்கப் பட்டாலும்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment