Saturday, 15 July 2017

பெண் என்பவள்

sad girl images hd க்கான பட முடிவு

பள்ளிப் பருவ வயதில் 
துள்ளித் திரிந்தவள் ! 
பருவம் போர்த்த நொடியில் 
பதுக்கப் பட்டவள் ! 
மனைவி யென்றப் பெயரில் 
மனையைத் துறந்தவள் ! 
கணவன் கையில் தன்னை 
கரையக் கொடுத்தவள் ! 
காதலென்றப் பெயருக்காய் 
காமம் தீர்த்தவள் ! 
புதிதின் உறவுக் கூட்டிற்குள்ளே 
புகுந்து கொண்டவள் ! 
புதுமை யேதும் செய்யவே 
மறந்து நின்றவள் ! 
நேசம் சுமக்க மட்டும் தான் 
கற்றுக் கொண்டவள் ! 
இன்றும் கூட இவள் மட்டுமே 
பெண் என்பவள் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts