திருந்தவே மாட்டானுங்க...!

நடிகை
'ஆஞ்சலினா ஜோலி'யை
எனக்கு,
ரொம்ப பிடிக்கும்...,
'கருப்பு குழந்தைகளின்
தாயாக!'
சமுகத்தின் அவலம்...,
சாலைகளின் சந்திப்பில்
பிச்சை யெடுக்கும்
சிறார்கள்!
ஆடிக்காரில் வந்த
நீலச் சிலுவையின்
தலைவர் சொல்கிறார்,
"இவனுங்க,
திருந்தவே மாட்டானுங்க!"
அவருக்கு பக்கத்தில்
மீட்கபட்ட,
பமோரியன் நாய்!
உண்மைதான்...
'நிச்சயம்,இவனுங்க...
திருந்தவே மாட்டானுங்க!'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment