Monday, 10 July 2017

விழுங்குவோம்

Image may contain: one or more people

இரவைப் பகலும் 
பகலை இரவும் 
விழுங்குதல் போல் 
உன்னை நானும் 
என்னை நீயும் 
விழுங்கிக் கொள்கிறோம் ! 

புன் முறுவலில் 
புதுக் கதைத் தொடங்கி 
வன் முறையில் முடிப்பது 
நமக்கும் வாடிக்கைதான் ! 

நடுவர் இல்லாத 
வழக்காடு மன்றம் 
நமக்கு மட்டும்தான் 
சாத்தியம் ! 

கனவுகள் காண்பதும் 
காணாமல் போவதும் 
நடுத்தர வர்கத்தின் 
சாபக் கேடுகள் ! 

ஆனாலும் 
ஒற்றைப் புள்ளி யொன்று 
இணைத்து வைத்தே சுற்றுகிறது ! 

வா ! 
யாராவது ஒருவர்
நம்மில் 
யாரையாவது விழுங்குவோம் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts