
வெள்ளை யானையொன்று
நீந்திச் செல்லும் வழித் தடத்தில்
காட்டுப் பூக்கள் வழி மறிக்கின்றன,
சர்பத்தின் உச்ச பட்ச ஓசை
வனத்தை மௌனமாக்க
நதியில் குளித்தெழுந்த காகம்
தலையைச் சிலுப்பிக் கொள்கிறது,
பயணத்தின் இடைவெளியில்
நீயும் நானும் உறங்கிக் கொள்வோம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment