
களிமண் சுவர்
வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?
அவை தேசத்தின்
துணைக் கோள்களாகவே
சுற்றிக் கொண்டிருக்கின்றன,
உங்கள் முப்பாட்டன்களில்
யாரவதொருவர்
அங்கு
வசித்துவிட்டே வந்திருக்க வேண்டும்,
அவைதான் உங்களுக்கு
இருட்டை வெளிச்சத்திற்கு
இடம் மாற்றுகிறது,
நீங்கள் தூக்கியெறியும் உணவுகள்
அவர்களின்
பண்டிகை பிரசாதங்களாக
இருந்திருக்கின்றன,
அவர்களின் வாழ்வியலில்
உங்களின் வாழ்வியல்
ஒட்டுவதே கிடையாது,
அவர்களின் கடவுள்கள் கூட
காலண்டர்களில்தான்
தரிசனம் தருகிறார்கள்,
அவர்கள் என்றுமே
உங்களைச் சுரண்டி வாழ்வதில்லை...
ஆனால் நீங்களோ
அவர்களைத்தான்
உருட்டி வாழ்கிறீர்கள்,
நாகரீகம் என்பது
களிமண் சுவரிலிருந்துதான்
தொடங்கியது என்பதை
சௌகரியத்தில் மறந்து விட்டீர்கள்...
இல்லை மறைத்து விட்டீர்கள்,
நீங்களொன்றும்
சூரிய புத்திரர்கள் இல்லை,
களிமண் சுவர்கள் ஈன்றெடுத்த
சாதா மண் பாண்டங்கள்தான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment