
ஊழல் ஒன்றுதான்
பிரச்சனை என்றார்கள்
அதுதான் என்று
நாங்களும் நம்பினோம்
இப்போது நாடே
பிரச்சனையில் இருக்கிறது,
அடிமை பட்டயத்தை
ஆதார் என்று
கையில் கட்டி விட்டார்கள்,
தங்கக் காப்பென்று
மாட்டிக் கொண்டோம்,
உணவு தட்டுகளை
பறித்துக் கொண்டார்கள்,
சந்நியாசிகளின் தலைகளில்
கிரீடம் வந்து ஒட்டிக் கொண்டது,
சேமிப்புகளையும்
கொள்ளையடித்தவர்கள்,
நடப்பதற்கும்
வரி கேட்கிறார்கள்...
பிரச்சனை இப்போது
ஊழலில் இல்லை...
ஊழலை ஒழிப்பதாய் சொன்ன
ஊதாரிகளை
அழிப்பதில்தான் இருக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment