Sunday, 2 July 2017

என்ன இதுவெல்லாம்?

நிதர்சனமான உண்மைகள்
உறக்கத்தில் கிடந்தன!

Image may contain: 1 person

பொய் முகங்கள்
அரிதாரம் பூசிக் கொண்டு
ஆட்டம் போட்டன!

காந்தியின் கைத்தடியில்
கறையான் புற்றுகள்!

சுதேசியம் பேசிய
தியாகிகளின் இரத்தங்களை
ஓநாய்கள் குடித்துக் கொண்டு!

மதுவின் கோப்பைகளுக்குள்
மனிதர்களை யார் போட்டது?

மனிதர்களை கொல்வதற்கு
மதங்களே ஆயுதங்களா?

தேசத்தின் சுவாசத்தை
நிறுத்த துடிப்பது...
அரசியலா?மனிதர்களா?

காலத்தின் ஓட்டத்தில்
நாமும்!
என்ன இதுவெல்லாம்?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts