
நான் அப்போது இங்குதான் இருந்தேன்
காக்கைகளைத் துரத்தி பிடித்தேன்
புறாக்களுக்குப் பொரிகளை இறைத்தேன்,
நீயும் என்னோடுதான் சேர்ந்திருந்தாய்,
கண்களைக் கட்டி கீழே தள்ளி விட்டாய்
நான் அழுதேன் நீ சிரித்தாய்
இப்போது
நான் தள்ளி நீ விழுந்து விட்டதாகச் சொல்கிறாய்
நான் எப்போது தள்ளினேன் உன்னை?
கண்களால் முத்தமிடுகிறாய்
ஈரத்தை எப்படி உலர வைப்பேன்?
காகங்கள் என்னைப் பார்க்கின்றன,
அவற்றை நான் விரட்டுவதில்லை...
உனக்குத் தெரியுமா?
மழைகள் என்னை நனைப்பதில்லை,
தூக்கம் யாரையோ காதலிக்கப் போய் விட்டது,
நான் தனியாகத்தான் நிற்கிறேன்...
நீ என் அருகில்தான் அழுகிறாய்
நான் இறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்
ஒருவேளை உன் முத்தம் கிடைத்தால்
உயிர் பெற்று உன்னோடு பேசக் கூடும்..
வா! உயிர் முத்தம் தா...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment