Wednesday, 5 July 2017

பெரு நாள் வாழ்த்து

Image may contain: 1 person

இறை வணக்க 
நோன்புகளின் இறுதியில்... 

பிறைப் பார்த்து 
பிறந்து விட்டது பெரு நாள் ! 

தர்மத்தின் வீடுகளில் 
அல்லாஹ்வின் சுகந்தம்! 

புத்தம் புது ஆடைகளில் 
பூத்திருக்கும் நறுமணங்கள் ! 

எங்குப் பார்த்தாலும் 
பெரு நாளின் வாசனைகள் ! 

புத்தாடைப் பிள்ளைகளின் 
கொத்தாடும் 
கொள்ளைச் சிரிப்பில் ! 

அப்பத்தாக்களின் 
அழகிய கிண்டல்களில் ! 

அண்ணன் களின் 
பெரு நாள் காசுகளில்! 

அப்பா மார்களின் 
நன் மொழி வாழ்த்துதலில் ! 

கூடுதல் தக்பீரின் 
பள்ளியின் 
சிறப்புத் தொழுகைகளில்! 

அல்லாஹூ அக்பரென்னும் 
தக்பீரின் 
குழுவான முழக்கங்களில் ! 

நண்பர்களின் அரவணைப்பில் 
நல் பறிமாற்ற வாழ்த்துகளில் ! 

மிஸ்கின் களின் 
பசியறுந்த சிரிப்புகளில் ! 

அம்மாக்களின் 
அன்பு மிஞ்சும் முத்தங்களில் ! 

அத்தாக்களின் அழகியப் 
பார்வைகளில் ! 

நண்பர்களின் 
கூடுதல் விளையாட்டில் ! 

நன்பகல் விருந்தின் 
பிரியாணிச் சோற்றின் 
நறுமணச் சுவையில் ! 

அத்தனையும் வாசம் 
பெரு நாளின் அழகிய நேசம்! 

ஈத் முபாராக்! 

- மு.முகமது பாட்சா 
கவிதை 06.07.2016

No comments:

Post a Comment

Popular Posts