Thursday, 13 July 2017

பாட்டுக்காரி

Image may contain: 1 person

என்னை என்ன செய்கிறாய் 
என் நினைவுகளைத் திருடிக் கொண்டு, 
என் கனவுகளில் நீதான் 
இரவில் வெளிச்சம் கூட்டுகிறாய், 
நீ கரையில்லாத நதியென்றால் 
நான் கடலாகக் காத்திருக்கிறேன்... 
நம் சங்கமம் எப்போது ? 
உன் விழிகளின் பூனை நடையை 
ரசித்துத்தான் 
பால் குடங்களை மறைத்து வைக்கிறேன், 
என் பாடலொன்று உனக்காகத்தான் 
மெட்டுகளை மாலை கட்டுகிறது... 
நானுமொரு நாடோடி பாட்டுக்காரிதான், 
பரிசுத்தத்தில் பெயரை தூக்கியெறிந்தாலும், 
பாடலில் 
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், 
பற்றியெரியும் வனத்தில் 
பரவச மழையைப் பார்த்திருக்கிறாயா? 
என் நாடோடிப் பாடலைக் கேள் 
ஒட்டகங்களெல்லாம் 
கடலின் மீது நடப்பது உனக்கே தெரியும்...

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts