
காதலியாக பார்க்கிறார்கள்
கவிஞர்கள்!
வடை சுடும்
பாட்டியின் வீடாகப் பார்க்கிறது
குழந்தைகள்!
நிலாவை,
குழந்தைகளின் கைகளில்
கொடுத்து விளையாடும்
பொம்மைகளாக
பாவிக்கிறார்கள்
அம்மாக்கள்!
தோழனாக பார்க்கிறார்கள்
தனிமை விரும்பிகள்!
காதல் சொல்லும்
தூதாக பார்க்கிறார்கள்
காதலர்கள்!
நிலா
ஏதோ ஒரு வகையில்
உறவாக இருக்கிறது
எல்லாருக்கும்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment